கன்னியாகுமரியில் அதிர்ச்சி!...ஒரே நாளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்! - Seithipunal
Seithipunal


குற்றச் சம்பவங்களை குறைப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில்,  நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்காக  மாவட்டம் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கன்னியாகுமரியில் ஒரே நாளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில், கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி மோதல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட  தருமபுரம் பகுதியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்ற வாலி, அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி,  தென்தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற தூத்துக்குடி செல்வம், ராமன்புதூரை சேர்ந்த சஞ்சய் பிரபு ஆகிய நான்கு பேரை கைது செய்து, மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் பெயர்களும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில்,  தற்போது 4 பேர் கைதாகி உள்ளதால் குமரி மாவட்டத்தில் ஒருஎ ஆண்டில்  குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock in kanyakumari the thug law on 4 historical record criminals in one day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->