சேலம் அருகே அதிர்ச்சி சம்பவம் : 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் கைது! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே விவசாய தோட்டத்திற்கு கூலி வேலை பார்க்க சென்ற 15 வயது சிறுமிக்கு, முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அடுத்த  வீரனூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற முதியவர்,  கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி பகுதியில்  தனியார் விவசாய தோட்டத்தில் பண்ணையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இதே போல் அந்த விவசாய தோட்டத்திற்கு 15 வயது சிறுமி ஒருவர் கூலி வேலை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முதியவர் பெரியசாமி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர்  சிறுமியின் பெற்றோர் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking incident near Salem old man arrested for impregnating 15 year old girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->