டிரம்ப் வரிவிதிப்பின் விளைவு..டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு! - Seithipunal
Seithipunal



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பின் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது. 2024 அக்டோபரிலிருந்து ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 4% வீழ்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரத்தின் முதல் நாளான இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைத்துள்ளது .மேலும் 67 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 87.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பின் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது . இதேபோல கடந்த 2024 ஆண்டு அக்டோபரிலிருந்து ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 4% வீழ்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாமல் அமெரிக்க டாலரின் வலிமை சீன யுவான் உட்பட பிற ஆசிய நாணயங்களையும் பாதித்துள்ளது என்றும் சீன யுவானின் சரிவு இந்திய நாணயத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ரூபாய் மட்டுமல்ல, டிரம்ப் வரிவிதிப்பின் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது என பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The effect of the Trump tariff Indian rupee hits all-time low against US dollar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->