சிவகங்கையில் பெரும் சோகம்! துடிதுடித்து பலியான சிறுவன்!  - Seithipunal
Seithipunal


சிவகங்கை அருகே அறுந்து விழுந்து கிடந்த மின் வயரை மிதித்து சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அடுத்த பெரும்பச்சேரி பகுதியில், அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியாகி உள்ளார். 

மின்கம்பத்தின் அருகே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராத விதமாக மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளார். 

இது குறித்து பெரும்பச்சேரி பொதுமக்கள் தெரிவிக்கையில், மின்வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் சிறுவன் உயிர் பறி போனதாக குற்றம் சாட்டினர்.

மேலும், மின் கம்பத்தை மாற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்சாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siuvagangai Littile boy death in current shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->