தமிழகம்: பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை! போராட்டம், சாலை மறியல், பதற்றம்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது.

வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற செல்வக்குமாரை வழிமறித்த மர்மக்கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்துள்ளது.

சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார் உடலை காயத்ரி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மகும்பலையும் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி, செல்வக்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பாஜக பிரமுகர் கொலைசெய்யப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

இதற்கிடையே, இன்று கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார், மேலும், கடலூரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் என்பவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தமிழக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai BJP Selvakumar Murder 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->