ஒரே நாளில் இரட்டை கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை! பீதியில் சிவகங்கை மக்கள்! - Seithipunal
Seithipunal


சிவகங்கையில் குடும்பத்த தகராறு காரணமாக இரட்டை கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சிவகங்கை, திருப்பாச்சி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக மாமியார் மற்றும் அவரின் தாயார் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மாமியார் பாண்டிச்செல்வி (50 வயது) அவரது தாயார் சொர்ண முத்துவை, மருமகன் பசுபதி வெட்டி படுகொலை செய்துள்ளார்.

பசுபதிக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்சனையால் கணவன் -மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மனைவி சுகன்யாவை பிரிந்து வாழ்வதற்கு மாமியார் மற்றும் அவரின் தாய் தான் காரணம் என்று கருதி, மருமகன் இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளார். 

படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய மருமகன் பசுபதியை போலீசார் தேடி வருகின்றனர். 

இன்று காலை பாப்பான்குடி பகுதியில் விறகு வெட்டும் தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் மானாமதுரை பகுதியில் முந்திரி தோப்பில் வைத்து பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் ஈடுபட்டதாகவும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கொலை, இரட்டை கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் நடந்திருப்பது, சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai Double Murder Abuse case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->