சிவகங்கை: போலீஸ் எஸ்ஐ-க்கு கத்திக்குத்து! ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் குகனை, வெட்டிவிட்டு தப்ப முயன்ற அகிலன் என்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், ரவுடி அகிலன் காயமடைந்துள்ளார். ரவுடி வெட்டியதில் எஸ்.ஐ. குகனுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காளையார்கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னதாக திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நேற்று இரவு காவலரை வெட்டி விட்டு தப்பி ஓடிய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மனோ நிர்மல்ராஜை பிடிக்க முயன்ற போது, காவலர் விக்னேஷை வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளார். 

இதனை அடுத்து ரவுடி மீது காவல் ஆய்வாளர் சந்தோஷ் குமார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரவுடிக்கு தற்போது திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivagangai Police Attacked gun fire to Rowdy Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->