பெண்ணை வைத்து முக்கிய புள்ளிகளுக்கு ஸ்கெட்ச்! வீடியோ எடுத்து மிரட்டி பண பறிப்பு! - Seithipunal
Seithipunal


சிவகங்கையில் ஆபாச வீடியோ காட்டி மிரட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி சேர்ந்த இளம் வயது மருத்துவர் ஒருவர் அங்கு தனக்கு அறிமுகமான செல்போன் கடைக்காரர் கொடுத்த மது விருந்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு ஒரு அறையில் மருத்துவ தனியாக இருந்த போது ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி உள்ளனர். அவர்களின் இருவரும் அறையில் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது செல்போன் கடைக்காரின் நண்பர்கள் சிலர் அறைக்கு வந்து மருத்துவரை மிரட்டி  ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் பயந்து முதற்கட்டமாக தன்னிடம் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை அந்த கும்பலிடம் கொடுத்து தப்பித்துள்ளார்.  பின்னர் அந்த கும்பல் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொடர்பு கொண்டு  வந்தது மட்டுமல்லாமல்  திடீரென்று ரூ.1 கோடி பணம் தரவில்லை என்றால் ஆபாச விடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணையில் செல்போன் கடை நடத்தி வந்த வாலிபர் நபர்களுடன் இணைந்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இளம் பெண் மற்றும் அந்த கும்பல் சேர்ந்து மருத்துவரை போன்று காரைக்குடி பகுதியில் பல்வேறு முக்கிய பிரபலங்களை  மிரட்டி பணம் பறித்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து அந்த கும்பலை வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai the police cast a net in search of a gang that threatened to show an obscene video and demanded Rs 1 crore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->