கலெக்டர்கிட்டையே விடுமுறை விட சொன்ன பள்ளி மாணவர்.! சூசகமாக பதிலளித்த கலெக்டர்.!   - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 29 ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வந்தனர். 

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த மாணவன் ஒருவர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு ஆட்சியர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று மிகவும் சூசகமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakaasi school student message to district collecter for rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->