சிவகாசியை அதிரவிட்ட விபத்து; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. மேனேஜர் கைது.!!
Sivakasi death toll increased 10 manager arrest
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் செயல்பட்டு வரும் பட்டா சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறையில் தரை மட்டமானது. இந்த கோர விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிடி விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த விருதுநகர் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன் போர்மேன் மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்கும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி சிவகாசி பட்டாசு ஆலை வடிவத்தில் 10 பேர் விழுந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன் மற்றும் ஒப்பந்ததாரர் முத்துக்கிருஷ்ணன் ஆகியவரை போலீசார் வலையில் தேடி வருகின்றனர்.
English Summary
Sivakasi death toll increased 10 manager arrest