சம்பள உயர்வு பெற்றும்.. "அரசியலுக்காக" போராடுகிறார்கள்..!! குற்றசாட்டும் சிவசங்கர்.!! - Seithipunal
Seithipunal


தமிழநாடு அரசு போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில முடிந்ததை அடுத்து இன்று இரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களின் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் சிரமமுமின்றி பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது "அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு உள்ளனர். தற்போது போக்குவரத்து துறையில் நிலவும் நிதிச்சுமை காரணமாகவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை.

குறிப்பிட்ட சில தொழிற்சங்கங்கள் அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர். மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிற்சங்கங்களிடம் அவகாசம் கேட்டுள்ளோம். தமிழ்நாடு அரசின் நிதி நிலை சீரான பின் அகவிலைப்படி கோரிக்கையை நிறைவேற்றுவோம். அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்கு கால அவகாசம் தான் கேட்கிறோம். போராடுவது உங்களுடைய உரிமை, ஆனால் மக்களுக்கு இடையூறு இன்றி போராட வேண்டும்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivasankar allegate Transport workers protest for politics


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->