சென்னை காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்! - Seithipunal
Seithipunal


ஆறு பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலை துணை கமிஷனராக தீபக் சிவஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ஆவடியில் கண்காணிப்பாளராக பணியாற்றினார். இந்த பதவிக்கு சென்னை கிழக்கு மாவட்ட போக்குவரத்து கமிஷனர் ஆக இருந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

பரங்கிமலை துணை கமிஷனராக இருந்த பிரதீப் தற்பொழுது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். உடுமலைப்பேட்டை எஸ்பியாக இருந்த சமய சிங் மீனா சென்னை கிழக்கு மாவட்ட போக்குவரத்து துறை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Six IPS officers transferred in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->