மதுரை சித்திரைத் திருவிழாவில் நடந்த கொலை சம்பவம் - சிசிடிவியை வைத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.!
six peoples arrested for madurai festival murder issue
மதுரை சித்திரைத் திருவிழாவில் நடந்த கொலை சம்பவம் - சிசிடிவியை வைத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.!
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்ட மூன்றும் சிகர நிகழ்ச்சிகள் ஆகும். இதில் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த மே 5ஆம் தேதி அன்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள் கூட்டத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வழிப்பறி செய்து வந்த கும்பல் அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே இளைஞர் ஒருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது.
அப்போது அங்கிருந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவரை மடக்கிப் பிடித்து அடித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி அவர்கள் விரைந்து வந்து அந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக கருப்பாயூரணியை சேர்ந்த முத்துப்பாண்டி, விஜய், குருநாதன் உட்பட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
English Summary
six peoples arrested for madurai festival murder issue