ஒரு டன் குட்கா மற்றும் பான் மசாலா கடத்தல் ..இருவர் கைது!
Smuggling of a ton of gutkha and pan masala Two arrested
ஒரு டன் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை கடத்திவந்த வாலிபர் இருவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே வாலாஜா நகர போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை நோக்கி வேகமாக வந்த காரை சோதனை இட்டபோது கார் முழுவதும் கருப்பு துணியால் அடைக்கப்பட்டு இருந்ததை சந்தேகத்தின் பெயரில் பரிசோதனை செய்ததில் ஒரு டன்குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.மேலும் இதில் பெங்களூர் சேர்ந்த கல்யாணராம்வயது (26) ராஜஸ்தானை சேர்ந்த கனாராம் வயது (29) ஆகிய இரு வாலிபர்கள் பெங்களூருவில் தங்கி குட்காவை சென்னைக்கு கடத்திச் சென்றதுதெரியவந்தது .
மேலும் அவர்களிடமிருந்து ஒரு டன் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல்செய்த போலீசார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு டன் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை கடத்திவந்த வாலிபர் இருவரை கைது செய்த போலீசாருக்கு எஸ் பி பாராட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
English Summary
Smuggling of a ton of gutkha and pan masala Two arrested