இதுவரை 5-ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது..முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்!
So far5000 government vacancies have been filled Chief Minister Rangasamy is proud
மக்கள் மீது அதிக அளவில் வரி போடாமல் சாமர்த்தியமாக திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் நேற்று நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது :முதலமைச்சர் திட்டங்களை அறிவிப்பார் ஆனால் செயல்படுத்த மாட்டார் என பொறாமையில் எதிர்கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அறிவித்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்தது இல்லை.மக்கள் மீது அதிக அளவில் வரி போடாமல் சாமர்த்தியமாக திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் ஒன்றை செய்ய முடியவில்லை, 5 ரூபாய் கூட செலவு செய்ய முடியாத நிலை இருந்தது.
தற்போது பல கோடி அளவில் வேலை நடந்து கொண்டிருக்கிறது.இதுவரை 5-ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.முதலமைச்சர் ரங்கசாமி.மக்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதிய பேருந்து நிலையம் திறப்பு தேதி தள்ளி வைப்பு.
இன்று 30-ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என அறிவித்து இருந்த நிலையில் மாற்று தேதியில் பேருந்து நிலையத்தை திறக்க உள்ளாட்சி மற்றும் நகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
English Summary
So far5000 government vacancies have been filled Chief Minister Rangasamy is proud