மண் கடத்தல் விவகாரம்: அதிமுக ஒன்றிய செயலாளரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


சேலம், ஓமலூர் அருகே ஏரியிலிருந்து மண் கடத்திய அதிமுக ஒன்றிய செயலாளரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். 

சிவந்தனூர் பகுதியில் இரவு நேரங்களில் மணல் கடத்தபடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்த விவகாரத்தில் காரமங்கலம் அதிமுக ஒன்றிய செயலாளர் காங்கேயன் தனது மனைவியான ஊராட்சி மன்ற தலைவர் வீரமாளின் உதவியுடன் மணல் கடத்துவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். 

இதனை அடுத்து மணல் கடத்தும் பகுதிக்கு நேரடியாக சென்ற போது மக்கள் மணல் கடத்திய லாரிகளை சிறை பிடித்தனர். அப்போது அங்கு வந்த காங்கேயம் லாரியை பிடித்த இளைஞர்களை தாக்கியுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் காங்கேயனை பதிலுக்கு தாக்கியுள்ளனர். தொடர் மோதல்கள் நடந்த போதிலும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. 

மேலும் பிடித்து வைத்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முன்வராமல் காங்கேயனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soil smuggling ADMK union secretary issue 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->