மது போதையில் விஷம் குடித்து பாதுகாப்பு படை வீரர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் மது போதையில் விஷம் குடித்த பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்கரை அவரிவிளை பகுதியை சேர்ந் ஆறுமுகம் என்பவரின் மகன் ஐயப்பகோபு (46). இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில், ஐயப்பகோபு கடந்த 4-ம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்தார். இதையடுத்து ஐயப்பகோபுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்த நிலையில், நேற்று மதியம் மது போதையில் வீட்டில் இருந்த தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்துள்ளார். 

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே ஐயப்பகோபு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி துர்கா கொடுத்த புகாரின் அடிப்படையில், இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soldier commits suicide due to alcohol intoxication in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->