சோமனூர் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு; தமிழக பா.ஜ., தலைவர்..!
Somanur power loom owners support the protest Tamil Nadu BJP leader
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 11 முதல், ஐந்து நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் சோமனுாரில் நடைபெற்றது.
ஜவுளி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி சங்கத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தனித்தனியே பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால், வேலை நிறுத்தத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும், அரசிடம் இது குறித்து வலியுறுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
English Summary
Somanur power loom owners support the protest Tamil Nadu BJP leader