காதலுக்கு மறுப்புத் தெரிவித்த பெற்றோர்.! இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரக் கொலை செய்த மகன்.!
son kill parents for against love in erode
காதலுக்கு மறுப்புத் தெரிவித்த பெற்றோர்.! இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரக் கொலை செய்த மகன்.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே அத்தாணி பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி-ரேணுகா தேவி தம்பதியினர். இவர்கள் மகன் கார்த்திக். இவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துக்குளி அருகே ஒத்தப்பனை மேடு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தோட்டத்து வீட்டில் குடும்பத்தோடு குடியேறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தோட்டத்தின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சகுந்தலா பால் கறப்பதற்காக வெளியில் வந்துள்ளனர். அப்போது, கிணற்றிலிருந்து காப்பாற்று படி அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதைக்கேட்டு சகுந்தலா ஓடிச் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் கார்த்தி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து சகுந்தலா கார்த்திக் குடியிருக்கும் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அங்கு அவரின் தாயும் உயிரிழந்த நிலையிலும், தந்தை உயிருக்கு போராடும் நிலையிலும் கிடந்துள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சகுந்தலா சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த கார்த்தியையும், அவரது தந்தையையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் ரேணுகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கார்த்திக்கிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "நேற்று இரவு வீட்டிற்கு வெளியில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டது. உடனே நான் வெளியில் சென்று பார்த்த போது பொக்லைன் எந்திரங்களை இரண்டு பேர் கழட்ட முயற்சி செய்தனர்.
அவர்களைப் பிடிக்க முயற்சி செய்தபோது இருவரும் என்னைத் தாக்கி கிணற்றுக்குள் வீசிவிட்டனர். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று தெரிவித்தார். இதனை நம்பாத காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கார்த்தி ஒரு பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்ததும், அதற்கு பெற்றோர் சம்மதிக்காத காரணத்தினால் அவர்களை இரும்பு கம்பியால் தாக்கியதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
son kill parents for against love in erode