தாயை கொடூரமாக அடித்துக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் தாயை அடித்துக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் முளிபட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்று சுப்புத்தாய். இவரது மகன் ராஜா(30). இந்நிலையில் அடிக்கடி சுப்புதாயிடம் பணம் கேட்டு ராஜா தகராறு செய்துள்ளார். இதில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜா பணம் கேட்டு தகராறு செய்தபோது, சுப்புத்தாய் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா இரும்புக் கம்பியால் சரமாரியாக சுப்பு தாயை தாக்கியுள்ளார். இதில் பரிதாபமாக சுப்புதாய் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தாயை கொடூரமாக கொலை செய்த ராஜாவுக்கு ரூபாய் 2500 அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son sentenced to life imprisonment for murder his mother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->