தென்னிந்திய அறிவியல் கண்காட்சி.. துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் & தொழில்நுட்ப அருங்காட்சியகம், இணைந்து நடத்தும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியை  துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். 

 புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் & தொழில்நுட்ப அருங்காட்சியகம், இணைந்து நடத்தும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி-2025 தொடக்க விழா கடற்கரைச் சாலை, பழைய துறைமுக வளாகத்தில்  நடைபெற்றது. 

இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். அறிவியில் மாதிரிகளின் செயல்பாடு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்களின் திறனைப் பாராட்டினார்.இந்த கண்காட்சியில்  முதலமைச்சர்  ரங்கசாமி, மாண்புமிகு உள்துறை & கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறைச் செயலர் ஜவகர், இயக்குநர்  பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக  நிலவரங்கள் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம்  பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார், அப்போது பல்கலைக்கழக பாதுகாப்பு மேம்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

  South Indian Science Exhibition Lieutenant Governor inaugurates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->