தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி! நாளை முதல்..!
southern districts Flood relief fund tomorrow
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கன மழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் குறைவான பாதிப்பு காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம், பயிர் சேதம், கால்நடை இழப்பு போன்றவைகளுக்கும் கணக்கீடு செய்யப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தாலுகா வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் வரை பாதிக்கபட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை முதல் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் பணத்தைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகை 3 முதல் 5 நாட்கள் வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
southern districts Flood relief fund tomorrow