கோவை-திண்டுக்கல் இடையே பொங்கல் சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலானது வரும் ஜனவரி 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து காலை 9:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மதியம் 1:00 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை வந்தடையும், அதன் பிறகு மறுமார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆனது மாலை 5:30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகளும், 2 சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட உள்ளன. 

இந்த சிறப்பு ரயிலானது ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southern Railway announced pongal special train between coimbatore-dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->