திடீரென முடங்கிய தெற்கு ரெயில்வேயின் முகநூல் பக்கம் - நடந்தது என்ன?
southern railway facebook page hacked
அனைத்து அரசு துறைகளும் சமூக வலைதளத்தில் தனக்கென்று ஒரு கணக்கைத் தொடங்கி வைத்துள்ளது. அதன் மூலம் தங்களது துறையின் அறிவிப்புகள், தகவல்களை வெளியிட்டு மக்களுக்கு தெரியப்படுத்திக்கிறது.
அந்த வகையில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மூலம் ரெயில்வே தொடர்பான அறிவிப்புகள், அறிக்கைகளை பதிவிட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த சமூக வலைதள பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தெற்கு ரெயில்வேயின் முகநூல் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. அதாவது மர்ம நபர்கள் முகநூல் பக்கத்தில் உள்ள முகப்பு புகைப்படத்தை மாற்றி, கார்ட்டூன் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே நிர்வாகம், சம்பவம் குறித்து தொழில்நுட்ப வல்லுனர் குழுவினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, அவர்கள் முடக்கப்பட்ட முகநூல் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில், தெற்கு ரெயில்வேயின் இணையதளம், டுவிட்டர் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கி வருவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
southern railway facebook page hacked