சட்டசபையில் வேல்முருகனை எச்சரித்த சபாநாயகர்.!! நடந்தது என்ன?
speaker appavu warned to velmurugan in assembly
சட்டசபையில் வேல்முருகனை எச்சரித்த சபாநாயகர்.!! நடந்தது என்ன?
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் துணைக் கேள்வி கேட்க வேல்முருகன் வாய்ப்பு கேட்ட நிலையில், “பேரவைத் தலைவரே இது நியாயமா? மூன்று நாட்களாக அவையில் துணைக்கேள்விக்கு வாய்ப்பு கேட்கிறேன். தர மறுக்கிறீர்கள்” என்று சத்தமாக பேசியுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “துணைக்கேள்வி யாருக்கு கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். சத்தமாக பேசாதீங்க வேல்முருகன் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேல்முருகன் தொடர்ந்து சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு “வேல்முருகனுக்கு கடந்த மார்ச் மாதம் 24, 28, 30, 31ஆம் தேதிகளில் நான்கு முறை துணைக்கேள்விகள் கேட்பதற்கு மட்டும் அனுமதி தந்துள்ளேன். அதுமட்டுமல்லாமல், அவசிய பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கெல்லாம் வாய்ப்பு தந்துள்ளேன்.
சபையில், ஒரு முறை கூட கேள்வி கேட்காமல் பல உறுப்பினர்கள் உள்ளார்கள். அதன் அடிப்படையில் தான் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறதே தவிர கட்சி சார்பாகவோ, வேறு எந்த நோக்கத்துடனோ கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
speaker appavu warned to velmurugan in assembly