தீபாவளிக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள்..? எந்தெந்த பயணிகள் எங்கு செல்ல வேண்டும்? முழு விவரம்! - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அக்.31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 14,016 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

அக்.28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 14,016 பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சென்னையில் இருந்து 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

கடந்தாண்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் , திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 

கோயம்பேட்டில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரத்தில் இருக்கிற புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், வழக்கமாக திருச்சி, சேலம் மற்றும் கும்பகோணம், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இயக்கப்படும். 

தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்காக 9,441 பஸ்கள் இயக்கப்படும். தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special Bus Deepavali 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->