கால் கடுக்க காத்திருந்த தமிழக மக்களுக்கு நல்ல செய்தி!  - Seithipunal
Seithipunal



வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாட்களில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு 1-ந் தேதி (இன்று) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 11 ஆயிரத்து 187 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். 

பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்றுமுதல் (வெள்ளிக்கிழமை) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 400 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special Buses in Chennai kovai salem madurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->