இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! - Seithipunal
Seithipunal


தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழக திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று வெள்ளிக்கிழமை, 31-ந்தேதி சனிக்கிழமை, செப்டம்பர் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு  தமிழகம் முழுவதும்  கூடுதலான பயணிகள்பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இதனை கருத்தில் கொண்டு  தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 355 பேருந்துகளும். நாளை 360 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பயணம் மேற்கொள்ள வெள்ளிக்கிழமை அன்று 7,950 பயணிகளும் சனிக்கிழமை 3,663 பபணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,840 பயணிகளும்  முன்பதிவு செய்துள்ளனர்.

தொலைதூர பயணம் மேற்கொள்ள எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இந்நிலையில், பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special buses running for 3 days from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->