சென்னை : வார இறுதி மற்றும் பௌர்ணமி கிரி வலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! - Seithipunal
Seithipunal



பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும், வார இறுதி நாட்களை முன்னிட்டும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப் படவுள்ளன. 

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , " வரும் ஜூலை 19, ஜூலை 20 மற்றும் ஜூலை 21 ஆகிய 3 நாட்களுக்கு வார விடுமுறையை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் மக்கள் பயணிக்கலாம். 

இதன் காரணமாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் எப்போதும் இயக்கும் பேருந்துகளை விட கூடுதலாக சில பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரைஉட்பட பல்வேறு இடங்களுக்கு ஜூலை 19 அன்று 260 பேருந்துகளும், ஜூலை 20 அன்று 585 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. 

அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகர்கோவில், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜூலை 19 அன்று 45 பேருந்துகளும், ஜூலை 20 அன்று 45 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

அதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட 50 சொகுசுப் பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ஜூலை 19ம் தேதி திருவண்ணாலை கிரிவலத்தை முன்னிட்டு இயக்கப்படவுள்ளது. 

அதேபோல் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு ஜூலை 19 அன்று 15 பேருந்துகளும், ஜூலை 20 அன்று 15 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜூலை 20 அன்று 30 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special Buses Running From Chennai For Weekend And Girivalam in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->