இன்று முதல் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் தொடக்கம்!
Special buses start in Tamil Nadu from today
அனைத்து பேருந்து நிலையங்களிலும் பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவலர்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
வார இறுதி நாட்கள், முகூர்த்தம் மற்றும் மிலாடி நபி தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சென்னையிலிருந்தும் மற்றும் மற்ற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, கும்பகோணம், திருநெல்வேலி, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மொத்தம் 955 பேருந்துகள் இன்று மற்றும் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும் இன்று மற்றும் நாளை மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டம் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்காக பயணிகளின் வசதிக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்கள் பயணத்திற்கு www.tnstc in மற்றும் Mobile App ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிகள் பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதனை தொடர்ந்து, இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள்அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் தங்களது வசதியினை பயன்படுத்தி பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Special buses start in Tamil Nadu from today