மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்.!
Special camp for who failed to apply for magalir urimai thogai
தமிழ்நாடு அரசு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கவுள்ளது. தமிழக அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு தற்போது நியாய விலை கடை மூலம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெறும் பணி கடந்த ஜூலை 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதற்கட்டமாக நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பம் அளிக்கத் தவறியவா்களுக்கென இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 2வது கட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி ஆகஸ்ட் 4 தொடங்கவுள்ளது. இதனிடையே, முதல்கட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை 74.9 லட்சம் மகளிரின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதற்கான மென்பொருள் உதவியுடன் சரிபாா்க்கப்பட்டு உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதியான குடும்பத் தலைவிகள் தோ்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Special camp for who failed to apply for magalir urimai thogai