திருநங்கைகளுக்கான சிறப்பு பிரிவு, தமிழக அரசின் அதிரடி உத்தரவு !! - Seithipunal
Seithipunal


திருநங்கைகளை சிறப்பு பிரிவின் கீழ் பரிசீலிக்க மறுப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், திருநங்கைகளை தனி பிரிவின் கீழ் நடத்தவும், பொது வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளுக்காகவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இரண்டாவது பிரதிவாதி திருநங்கைககளை சிறப்பு பிரிவின் கீழ் நடத்த வேண்டும் என்றும், அனைத்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அவர்களை பெண் அல்லது ஆண் பிரிவின் கீழ் நடத்தக்கூடாது என்று நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருநங்கைகளை சிறப்புப் பிரிவாகக் குறிப்பிடவும், சாதி அடிப்படையிலான பிற பிரிவினருக்குத் தனி மற்றும் குறைந்த கட்-ஆஃப் மதிப்பெண்கள், வயது தளர்வு மற்றும் பிற விதிமுறைகளை பரிந்துரைக்கவும் தமிழக அரசின் கீழ் வரும் அனைத்து ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிடுமாறும் உள்துறைச் செயலாளரை நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் குரூப்பின் கீழ் வரும் பணியிடங்களுக்கு சிறப்பு பிரிவில் திருநங்கைகளின் விண்ணப்பத்தை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஒரு  திருநங்கை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய வாய்ப்புகளை வழங்கி திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசின் கடமையாகும். மாற்றுத்திறனாளிகளை அவர்களின் சாதி அடிப்படையில் மட்டுமே வகைப்படுத்தினால் அது அவர்களின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும். அதனால் அவர்கள் சிறப்பு பிரிவாக கருதப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special section for transgenders Tamil Nadu governments action order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->