இனி ஆயுள் வரை கடுங்காவல்: ரூ.10 லட்சம் அபராதம் - ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 29-ம் தேதி  நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

செய்தியும், பின்னணியும்:

கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 229 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதில் சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த கள்ளச்சாராய மரண வழக்கை சிவிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 29ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spurious Liquor Law TN Assembly RN Ravi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->