கைது செய்யாதீங்க... முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் ஸ்ரீமதியின் தாய் செல்வி பேட்டி.!  - Seithipunal
Seithipunal


மர்மமான முறையில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உள்ளனர்.

ஸ்ரீமதியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் உள்ளிட்டோர் முதலாசரை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், ஸ்ரீமதியின் மரண வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்கில் விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

முதலாமச்சருடனா சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீமதியின் தாய் தெரிவித்தாவது, 

"குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். முதல்வரை முழுமையாக நம்புகிறோம்.

அப்பாவி மாணவர்களை கைது செய்வதை கைவிட வேண்டும். கலவரத்தில் ஈடுபடாத பள்ளி மாணவர்களை கைது செய்ய கூடாது. இந்த கைது படலத்தை நிறுத்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜிப்மர் மருத்துவ அறிக்கை எங்கள் கைக்கு இன்னும் வரவில்லை. அதுகுறித்து மேல்முறையீடு செய்யலாமா என்று ஆலோசித்து வருகிறோம். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri mathi mom press meet after cm stalin meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->