அத்துமீறும் இலங்கை கடற்படையினர் - ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது.!
srilangan navy arrested nine rameshwaram fishermans
தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை நேற்று நள்ளிரவு கைது செய்துள்ளது.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படைனயினர் கைது செய்துள்ளனர்.
மேலும், மீனவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச்சென்றனர். இந்தச் சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ரமேஷராம் மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
srilangan navy arrested nine rameshwaram fishermans