என்ன அநியாயம் இது..? தமிழக மீனவர்கள் விடுதலையோடு, 3 படகு ஓட்டுனர்களுக்கு 1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


இலங்கைக் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களில் 19 பேர் நிபந்தனையுடன் விடுவிக்கப் பட்டுள்ளதுடன், 3 படகு ஓட்டுநர்களுக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் அபராதம்  விதித்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஜூன் 22ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 3 விசைப் படகுகளில் 22 மீனவர்களை இலங்கைக் கடற்படை நெடுந்தீவு அருகே கைது செய்தது. மேலும் படகுகளையும் கைபற்றிச் சென்றது. இந்த 3 படகுகளும் ஜஸ்டின், ரெய்மண்ட், ஹெரின் ஆகியோருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல், எல்லை தாண்டி மீன்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப் பட்டனர். இந்நிலையில் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 6) விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் நீதிபதி நளினி சுபாஷ்கரன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். 

அதில், 19 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்றும், மற்றும் படகை ஓட்டிய காளீஸ்வரன், கருப்பையா, ஜெகன் ஆகிய 3 பேரும் இலங்கை மதிப்பில் ஆளுக்கு தலா ரூ. 40 லட்சம் வீதம் மொத்தம் 1 கோடியே 20 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், மீறினால் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். இந்த அபராதத்தின் இந்திய மதிப்பு சுமார் 33 லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka Released TN Fishermen and Fined Rs 1 Crore and 20 Lakhs For 3 Boat Drivers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->