தமிழக மீனவர் மீது கொடூர தாக்குதல்.‌. இலங்கை கடற் கொள்ளையர்கள் அட்டூழியம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திலிருந்து வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் மற்றும் இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதோடு மீனவர்களின் உடமைகளையும் மீன்பிடி படகையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர் முருகன் என்பவர் கோடிக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் முருகனின் வலை ஜிபிஎஸ் செல்போன் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். 

இலங்கை கடற் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க தமிழக மீனவர் முருகன் கடலில் குதித்துள்ளார். அவரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilankan pirates attack on Tamil Nadu fishermanattack on Tamil Nadu fisherman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->