பேராசிரியை நிர்மலா தேவி மட்டுமே குற்றவாளி: இருவர் விடுதலை.. மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக தொடர் பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நிர்மலாதேவி தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பெயரை கூறி தவறாக வழி நடத்தியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

அதனை எடுத்து கல்லூரி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து அவர் தற்காலிகமாக பணியிடை நீக்க செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக 5 மாணவிகள் அளித்த புகாரை அடுத்து அவர்களிடம் இருந்து சாட்சிகள் சேகரிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேலும் உரிய சாட்சியங்கள் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது அடுத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி அருப்புக்கோட்டை நகர் போலீசார் நிர்மலா தேவியை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் இதில் தொடவை இருப்பது தெரியவந்த இடத்தில் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

பேராசிரியை நிர்மலாதேவி உட்பட மூன்று பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் விபச்சார தடுப்பு சட்டம் தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற முறைகேடு உள்ளிட்ட 4 பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு 1360 பக்கங்கள் கொண்ட உத்தரவு பத்திரிக்கை வழக்கு நடைபெற்ற விருதுநகர் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

பின்னர் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை வேளையில் முதல் குற்றவாளியான நிர்மலா தேவியின் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவர் 5 பிரிவுகளின் கீழ் குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srivilliputhur Court verdict convicts Professor Nirmala Devi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->