"2 லட்சம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் விநியோகம்" முதலமைச்சரின் புதிய திட்டம் !! - Seithipunal
Seithipunal


வேளாண் நிலத்தின் மண் வளத்தை பாதுகாக்கும் எண்ணத்தில், 'மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது 2024-25ஆம் ஆண்டுக்கான விவசாய துறைக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் 22 கூறுகளைக் கொண்ட இந்தத் திட்டத்தை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்தார்.

விவசாயிகள் இடையே பசுந்தாள் உரப் பயன்பாட்டை அதிகரிக்க ஊக்குவிப்பதன் மூலம் மண் வளத்தைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உர விதைகளை விநியோகிக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், மேலும், 2 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்னவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பசுந்தாள் உரம் மண்ணில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளைப் பாதுகாக்கும் திறன் கொண்டவை, மேலும், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை பெருக்கும் தன்மை கொண்டது. மொத்தம், 4,000 டன் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தனர்.

மேலும், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வாங்கப்பட்ட டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேலூர், கோவை, திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் 500 கிராமப்புற இளைஞர்களுக்கு மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று உறுதி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, கே.பொன்முடி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin new scheme for all the formers of tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->