ஜாதி பார்த்து விடுப்பு அளிக்கும் திருப்பத்தூர் டி.எஸ்.பி..! தற்கொலைக்கு தூண்டுவதாக ஆயுதப்படை காவலர்கள் குமுறல்..!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள் முதல்வர் மு.க ஸ்டாலின், டி.ஜி.பி சைலேந்திரபாபு, வடக்கு மண்டல ஐ.ஜி, வேலூர் டி.எஸ்.பி மற்றும் திருப்பத்தூர் எஸ்.பி.,க்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் திருப்பத்தூர் ஆயுதப்படை டிஎஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

ஆயுதப்படை காவலர்கள் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில்"திருப்பத்தூர் ஆயுதப்படைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி விநாயகம் காவலர்களுக்கு போதிய அளவில் விடுப்பு தருவதில்லை. திருமணத்திற்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்கள் கேட்டால் 7 நாட்கள் மட்டுமே தருகிறார். மருத்துவ சிகிச்சை எடுக்க 30 நாள் கேட்டால் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு கொடுத்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி விடுகிறார்.

வாராந்திர ஓய்வும் தருவதில்லை, ஓய்வு கேட்டு மனு அளித்தால் கிழித்து முகத்தில் வீசுகிறார். விடுப்பு வேண்டும் என கேட்கும் காவலர்களுக்கு மெமோ கொடுப்பேன், பதவி உயர்வு நிறுத்தி வைப்பேன் என மிரட்டுகிறார்.

அவரது ஜாதி காவலர்களுக்கு மட்டுமே கேட்கும் விடுப்பை அப்படியே வழங்குகிறார். ஆயுதப்படையில் கழிவறை வசதி எதுவும் இல்லை. தினமும் பணி முடிந்து மாலை வரும் காவலர்களை வீட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே கட்டாயப்படுத்தி தங்க வைக்கிறார்.

இதன் காரணமாக திருமணம் ஆன ஆயுதப்படை காவலர்கள் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். சிலருக்கு தற்கொலை எண்ணமும் ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் தவிர்க்க டிஎஸ்பி விநாயகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகத்திற்கு எதிராக ஆயுதப்படை காவலர்கள் எழுதிய இந்த புகார் கடிதம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin take action against DSP causing distress to police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->