மாநில காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி.. டி.ஜி.பி.சைலேந்திரபாபு சாம்பியன் பட்டம் வென்று சாதனை.! - Seithipunal
Seithipunal


மாநில காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் கடந்த 3 நாட்களாக நடந்தது. காவல்துறையில் உள்ள 8 அணிகள் சார்பில் 220 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று ஆயுதப்படை அணியினர் முதல் இடத்தை பிடித்தனர். 2வது இடத்தை தலைமையிட அணியும், 3வது இடத்தை சென்னை காவல்துறை அணியும் பெற்றது. 

உயர் அதிகாரிகளுக்கான போட்டியில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அவர் கலந்து கொண்ட போட்டிகளில் 2 தங்க பதக்கங்களையும், ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றர். 2வது இடத்தை முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டு திருந வுக்கரசு பெற்றார். 3வது இடத்தை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பிடித்தார். 

வெற்றிபெற்றவர்களுக்கு டி.ஜி.பி.சைலேந்திரபாபு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல்துறை அணி சார்பில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

State Police Shooting Competition DGP Shailendrababu won the title of champion


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->