ராணிப்பேட்டை அருகே சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு..!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு சொகுசாகவும், நேரமும் மிச்சப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த ரயில் சேவை இந்திய அளவில் தொடங்கப்பட்ட 13-வது வந்தே பாரத் ரயில் சேவை ஆகும். சென்னையில் இருந்து கோவை வரை இரு மார்க்கத்திலும் தினமும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மகேந்திரவாடி- அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை மைசூருலிருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ரயிலின் பக்கவாட்டு கண்ணாடி சேதமடைந்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அடைந்ததும் இந்த சம்பவம் குறித்தான புகார் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பல மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stone pelting on Chennai Mysore Vande Bharat train near Ranipet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->