புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை: தொடக்கி வைத்த அன்பில் மகேஷ்.! - Seithipunal
Seithipunal


பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை இன்று தொடங்கி வைத்துள்ளார். 

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்த அமைச்சர், அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும் தங்களது பகுதிகளில் உள்ள 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

அரசு பள்ளிகளில் கொரோனா காலத்திற்குப் பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் உயர்கல்வியில் இட ஒதுக்கீடுகளும் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் அரசு பள்ளிகளில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை இன்று முதல் சேர்க்கலாம் என  சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student admission new academic year 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->