சிவகங்கை : செல்போனை பறித்த தந்தை - ஆத்திரத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை : செல்போனை பறித்த தந்தை - ஆத்திரத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கலைஞர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகள், பள்ளி படிப்பு முடித்து விட்டு இந்த ஆண்டு கல்லூரிக்கு செல்ல உள்ளார்.

இந்த நிலையில் ரவிச்சந்திரனின் மகள் தொடர்ந்து செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதை பார்த்த ரவிச்சந்திரன் மக்களைக் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்தின், மக்களிடம் இருந்து செல்போனை பறித்துள்ளார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மாடியில் இருந்து குதிக்க முயன்ற அந்த பெண்ணை சமாதானப்படுத்தும் வகையில் பேசியபடி, மாடியில் இருந்து மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student sucide attempt in sivakangai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->