மீண்டும் தமிழகத்தில் பரபரப்பு! பள்ளி மேல்கூரை இழுத்து விழுந்து மாணவி படுகாயம்!
student was injured after falling from the roof of the school
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பள்ளி மேல்கூரை இடிந்து விழுந்து பள்ளி மாணவி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியில் இயக்கிவரும் தனியாருக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அப்பகுதியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் கிருத்திகா இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்து தனது வகுப்பறையில் நமது பாடம் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பறையின் பழுதான மேற்கூரை கட்டிடம் திடீரென இடிந்து மாணவியின் தலைமீது விழுந்ததாக கூறப்படுகிறது.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவியின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
மேலும் மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அலறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். பின்னர் மாணவி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி திறப்புக்கு முன்பு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயாராக செய்து கொடுக்க வேண்டும். பாழடைந்த கட்டிடங்கள் சுவர் ஆகியவற்றை இழுத்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டும் பெரும்பாலான பள்ளிகளில் இதை பின்பற்றவில்லை. பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் செயல்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
student was injured after falling from the roof of the school