இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் அமலுக்கு வரும் அதிரடி மாற்றம்- பள்ளிக்கல்வித்துறை.!
Students and teachers attendance register in app from today
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியின் மூலமாக வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு செயலியின் மூலமாக வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது இன்று முதல் TNSED என்ற செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும்.
வருகை பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த செயலியில் காலை 10 மணிக்குள் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த செயலியில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து தான் வருகையை பதிவு செய்கிறார்களா என்பதை கண்கானிக்கவும் செயலில் பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Students and teachers attendance register in app from today