தர்மபுரியில் பரபரப்பு! மயக்கம் போட்டு விழுந்த பள்ளி மாணவர்கள்! பள்ளியிலே மருத்துவ முகாம்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி  கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர் குடித்த மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி கம்பைநல்லூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள்  உணவு இடைவெளியின் போதும் தண்ணீர் தாகம் எடுத்தாலும் பள்ளியில் இருக்கும் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீரை குடிப்பது வழக்கம்.

இன்று வழக்கம் போல் பள்ளி செயல்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் வழக்கம்போல் பள்ளி மேல்நிலைத் தொட்டியில் தண்ணீரை குடித்துள்ளனர். தண்ணீரைக் குடித்த சில மணி நேரத்தில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவர்களின் மருத்துவ குழுவினருக்கும்  போலீஸாருக்கும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், பள்ளிக்கு விரைந்த மருத்துவ குழுவினர் பள்ளியிலே மருத்துவ முகாம் அழைத்து மாணவர்களுக்கு சோதனை செய்து வருகின்றனர். மாணவர்கள் குடித்த நீரை நிபுணர்கள் பரிசோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students fainted after drinking water at Campinallur Government School Dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->