மாணவர்களே 4 வருடத்திற்கு ரூ.1000 இலவசம்!...இதோ உடனே அப்ளை பண்ணுங்க!
Students free rupees 1000 for 4 years apply now
ஆண்டுதோறும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2024-2025 ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2024 டிசம்பர் மாதம் 14-ம் தேதி ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தகுதி உடையவராவார்கள் யார்?
ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள்.
ஆண்டு வருமானம் எவ்வ்வளவு இருக்க வேண்டும்?
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 20-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவின் அடிப்படையில், ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு ஆண்டு தோறும் ரூ.1000 வீதம் வழங்கப்பட உள்ளது.
English Summary
Students free rupees 1000 for 4 years apply now