இந்து அறநிலைத்துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும்! தமிழக அரசுக்கு சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலை துறை வெளியேற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் சிதம்பரம் பொது தீட்சரவர்கள் சீர்மரபினர் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் 1951ல் உறுதி செய்ததை மீண்டும் பரிசீலிப்பதற்கு இடமே இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று தில்லை நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் பல ஆண்டு காலமாக நிர்வாகம் செய்து வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாகத்தில் சீர்கேடு இருந்தால் மட்டுமே அறநிலையத்துறை அதன் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள முடியும். மேலும் நிர்வாக தவறுகளை சரி செய்து விட்டு உடனடியாக கோவிலை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கோயிலின் நிர்வாகத்தை தொடர்ந்து அறநிலைத்துறையால் மேற்கொள்ள முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 45 படி ஒரு செயல் அலுவலர் நியமித்து விதிகள் ஏற்படுத்தாமல் நியமனம் செய்தால் செல்லாது. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வைத்தீஸ்வரன் கோயில் வழக்கில் 1965 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் அறநிலைத்துறை சார்பில் தகுந்த காரணங்கள் இல்லாமல் நியமனம் செய்தால் செல்லாது. அவ்வாறு அலுவலர்கள் நியமனம் செய்தாலும் சிறிது காலம் தான் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்க தீர்ப்புகளை அரசியல் சாசன சரத்து 141ன் படி கீழமை நீதிமன்றங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது விதி. எனவே அரசியல் சாசன விதி 25 மற்றும் 26ன் இப்படியும், சிதம்பரம் கோவில் தொடர்பான வழக்கின் தீர்ப்பின்படியும் தமிழக கோயில்களில் இருந்த இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subramania Swamy letter to Stalin regarding the Chidambaram Nataraja temple issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->