நாளை முதல் கோடை மழை..வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
Summer rain from tomorrow Meteorological Department Forecast
7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் கடலோர, உள் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்..
தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி வதைக்கிறது.இந்த வெயிலால் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இந்தநிலையில் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் நீடிக்கும் என கூறப்பட்டது.அதன்படி, வெப்பத்தின் அளவு இயல்பைவிட சற்று கூடுதலாகவே பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக வாட்டி வதைத்த வெயிலுக்கு சற்று இடைவெளி கொடுக்கும் வகையில் கோடை மழை எட்டி பார்க்க இருக்கிறது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் பகலில் வெப்பம், இரவில் இடி மின்னலுடன் மழை என்ற நிலையிலேயே பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல காற்று குவிதல் மற்றும் காற்று சுழற்சி போன்ற காரணிகளால் நாளை முதல் கோடை மழை வருகிற 12-ந்தேதி வரை நீடிப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் கோவை, நீலகிரிகரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, , தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வருகிற 6-ந்தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாக உள்ளதாகவும், அதனால் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் கடலோர, உள் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்..
English Summary
Summer rain from tomorrow Meteorological Department Forecast